முஹம்மது அலிஜின்னா கல்லறைக்கு கடற்படைத்தளபதி மலரஞ்சலி | தினகரன்

முஹம்மது அலிஜின்னா கல்லறைக்கு கடற்படைத்தளபதி மலரஞ்சலி

 

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்படைதளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன காரச்சியிலுள்ள முஹம்மது அலி ஜின்னாவின் பிரபல்யமான தேசிய கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

காரச்சியிலுள்ள தேசிய முஹம்மது அலி ஜின்னா கல்லறைக்கு நேற்று முன்தினம் விஜயமொன்றினை மேற்கொண்ட கடற்படைத்தளபதி மலர் அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

பாகிஸ்தானை உருவாக்கிய முஹம்மது அலி ஜின்னா இறுதியாக ஓய்வெடுத்த இடமாக இது கருதப்படுகின்றது.

குறித்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கல்லறை 1960ம் ஆண்டு பூரணப்படுத்தப்பட்டது.

இக்கல்லறை உலகளாவிய ரீதியில் ஒரு சிறந்த அடையாளச்சின்னமாக கருதப்படுகின்றது.

வெளிநாட்டவர்கள் மத்தியில் இக்கல்லறை ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தளமாகவும் விளங்குகின்றது.

பல்வேறுபட்ட உத்தியோகபூர்வ மற்றும் இராணுவ நிகழ்வுகளும் இங்கு இடம் பெறுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரர் ,பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...