மாகாண சபைகளில் போராட்டம் வெடிக்கும் | தினகரன்

மாகாண சபைகளில் போராட்டம் வெடிக்கும்

 

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து அதிகாரங்கள் பறிக்கப்பட்டமை தொடர்பில் உரிய அமைச்சர் முறையான கவனம் செலுத்தல் வேண்டும். இது விடயத்தில் அமைச்சரின் கவனம் இடம்பெறாது போனால் குறுகிய நியதிச் சட்டமூலங்களை மாகாண சபையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பித்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை மாகாண சபைகள் பெற்றுக்கொடுக்கும்.

மாகாண முதலமைச்சர்கள் அனைவரும் இதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். மாகாண சபைகளின் இந்த செயல்பாடு மாகாண சபைகளின் முதலாவது புரட்சிகரமான செயல்பாடாகவும் விளங்குமென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல் மாகாண முதலமைச்சில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து மீளப்பெறப்பட்டுள்ள அதிகாரங்களை திரும்பவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவதற்கு பாரிய நகர அபிவிருத்தி மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேல் மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்த பல்வேறு அதிகாரங்களை மீளப்பெறும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயல்பாடுகளை உரிய அமைச்சரல்லாது அதிகார சபையே செய்து வருவதாக தெரியவருகின்றது. எமது நியதிச் சட்டம் தயாராகவுள்ளது. சபை அங்கீகாரம் பெறுவது மாத்திரமே மீதமாகியுள்ளது தேவையாகியுள்ளது. சிக்கலான நிலையொன்று ஏற்படாதிருக்க அமைச்சர் செயல்படுவாரென தான் எதிர்பார்க்கின்றேன்.

வட மாகாண முதலமைச்சர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த போதிலும் மாகாண சபைகள் சமஷ்டி முறைக்குச் செல்வதை அனுமதிக்க முடியாது.

சர்வதேச நீதிபதிகளின்றி தேசிய நீதித்துறையின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய ஆற்றல் அரசுக்கு உள்ளது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாணந்துறை மத்திய குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...