Thursday, March 28, 2024
Home » Joseph Fraser Ninewells Hospital பாரம்பரியத்தை கௌரவிக்க அதன் வாரிசு விஜயம்

Joseph Fraser Ninewells Hospital பாரம்பரியத்தை கௌரவிக்க அதன் வாரிசு விஜயம்

- ஜோசப் ஃப்ரேசரின் பேத்தியான பட்ரீசியா மொல்லாய், நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் மருத்துவமனைக்கு விஜயம்

by Rizwan Segu Mohideen
September 1, 2023 11:22 am 0 comment

புகழ்பெற்ற மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனையான ஜோசப் ஃப்ரேசர் நைன்வெல்ஸ் மருத்துவமனை அதன் 100 ஆண்டுகால பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், அந்த மருத்துவமனையின் பெயருக்கு காரணமான ஜோசப் ஃப்ரேசரின் பேத்தியான பட்ரீசியா மொல்லாய் அவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளார். 2023 ஆகஸ்ட் 24 ஆம் திகதி, இந்த இதயத்தை வருடும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கும் வகையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றதுடன், இது இலங்கையில் மகளிர் மற்றும் சிறுவரின் சுகாதாரப் பராமரிப்புக்கான மருத்துவமனையின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தவும், அதன் ஸ்தாபக நோக்கத்திற்கு கௌரவம் செலுத்தவும் உதவியது. மறைந்த தனது கணவர் ஜோசப் ஃப்ரேசரின் நினைவாக 1923 ஆம் ஆண்டில் கிறிஸ்ஸி ஃப்ரேசர் அவர்களால் இந்த மருத்துவமனை ஸ்தாபிக்கப்பட்ட நூற்றாண்டு விழாவையொட்டியதாக இந்த வருகையும், நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.

ஜோசப் ஃப்ரேசரின் 4வது, 5வது மற்றும் 6வது தலைமுறையின் வழித்தோன்றல்களை உள்ளடக்கிய அவரது குடும்பத்தினர் புடைசூழ, பட்ரீசியா மொல்லாயின் வருகை இந்நிகழ்வுக்கு குடும்ப உறவின் உணர்வைச் சேர்ப்பித்தது. இந்நிகழ்வில், ஜோசப் ஃப்ரேசர் நைன்வெல்ஸ் மருத்துவமனையின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. தியோ பெர்னாண்டோ மற்றும் ஜோசப் பிரேசர் நினைவகத்தின் அறங்காவலரான திரு. தோமஸ் டேட்வைலர் ஆகியோர் கலந்து கொண்டு, மகளிரின் சுகாதாரப் பராமரிப்பில் ஃப்ரேசர் குடும்பத்தின் நீடித்த அர்ப்பணிப்பைப் பாராட்டி, பட்ரீசியா மொல்லாய்க்கு நினைவுச்சின்னத்தை வழங்கினர்.  

நிகழ்வின் மையப் புள்ளியாக மருத்துவமனையின் விசாலமான மற்றும் பசுமையான தோட்டங்களுக்குள் இந்திய நெல்லிக்காய் (நெல்லி) மரக்கன்றொன்று அடையாளமாக நாட்டப்பட்டது. இது வளர்ச்சி, உயிர்ப்பு மற்றும் தொடர்ச்சிக்கான கௌரவத்தின் அடையாளமாக அமையப்பெற்றதுடன், மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு அதிசிறந்த கவனிப்பை வழங்குவதில் ஜோசப் ஃப்ரேசரின் அர்ப்பணிப்புடன் ஆழமாக பின்னிப்பிணைந்த விழுமியங்களாக இவை கட்டிக்காத்து, நிலைநாட்டப்பட்டுள்ளன.  

வைபவத்தின் ஒரு பகுதியாக, மருத்துவமனையின் மெச்சத்தக்க பயணத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஒரு தகவல்பூர்வமான விளக்கக்காட்சியும் நிகழ்த்தப்பட்டது. தனது நூறாவது ஆண்டை பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில், ஜோசப் ஃப்ரேசர் நைன்வெல்ஸ் மருத்துவமனை எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறி, இலங்கையில் மகளிர் சுகாதாரப் பாதுகாப்பில் தொடர்ந்து தரத்திற்கான அளவுகோல்களை அமைக்கத் தயாராக உள்ளது. பிறப்பிலிருந்து வாழ்க்கையின் அனைத்து மாற்றக் கட்டங்களிலும் மகளிரின் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் மருத்துவமனையின் மரபு, அதன் நீடித்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

பட்ரீசியா மொல்லாய் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, கருத்து வெளியிடுகையில், “என் தாத்தாவின் பாரம்பரியத்தை கௌரவிப்பதில் நான் மகிழ்ச்சியடைவதுடன், இது நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்கப்படுவதைக் காண ஆவலாக உள்ளேன். எனது பாட்டியின் நோக்கு இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க மருத்துவமனையால் வழங்கப்படும் தலைசிறந்த கவனிப்பில் உட்பொதிந்துள்ளது என்பதையும் குறிப்பிடுவது எனது மனதை ஆழமாக வருடுகின்றது,” என்று குறிப்பிட்டார்.  

முகாமைத்துவப் பணிப்பாளரான தியோ பெர்னாண்டோ அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “எமது வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆணித்தரமான பாரம்பரியத்தை கட்டியெழுப்ப நாம் ஆவலாக உள்ளோம், எதிர்வரும் நூற்றாண்டில் மகளிர் மற்றும் சிறுவர்களின் சுகாதாரப் பராமரிப்பில் தொடர்ந்து முன்னணியில் இருப்போம்,” என்று குறிப்பிட்டார்.  

நன்றி மற்றும் பிரதிபலிப்பின் பகிரப்பட்ட தருணங்களுக்கு மத்தியில், பட்ரீசியா மொல்லாயின் அஞ்சலி ஜோசப் ஃப்ரேசர் நினைவு மருத்துவமனையின் உணர்வோடு எதிரொலித்தது. வரலாற்றில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில், தலைசிறந்த கவனிப்புக்கான மருத்துவமனையின் அர்ப்பணிப்பு தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. இறுதியில், மரபு என்பது மரபுவழியில் வருவது மட்டும் அல்ல, நம்மைக் கடந்து போனவற்றிலும் உள்ளது என்பதை மனதில் ஆழமாக பதிக்கச்செய்யும் நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT