தோசையால் காதல் அம்பலம் | தினகரன்

தோசையால் காதல் அம்பலம்

 

மனைவி ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் பட புரமோஷனில் குதித்திருக்கிறார் சூர்யா. இதற்காக மனைவிக்கு தோசை சுட்டு தரும்போட்டி அறிவித்ததுடன் வீட்டில் ஜோதிகாவுக்கு சுடச்சுட தோசை சுட்டு பரிமாறி அதற்கான புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்தபோட்டியில் பங்கேற்கும்படி மற்றவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். நடிகர் ஜெய், அஞ்சலி காதலிப்பதாக ஏற்கனவே கோலிவுட்டில் கிசுகிசு பரவி வருகிறது. இதுபற்றி இருவரும் உறுதி செய்யாமலிருந்தனர். தற்போது அவர்கள் காதலை சூர்யாவின் தோசை போட்டியும், வெங்கட்பிரபு தந்த அழுத்தமும் அம்பலத்துக்குக்கொண்டு வந்திருக்கிறது.

இதுபற்றி வெங்கட்பிரபு தனது இணைய தள பக்கத்தில் ஜெய்யிடம் வலியுறுத்தும்போது, ‘ஜெய் முடிஞ்சா இந்த தோசை சவாலை ஏற்றுக்கொண்டு உங்கள் காதலிக்கு பரிமாறி அந்த புகைப்படத்தை வெளியிடுங்கள்’ என கூறியிருந்தார். வெங்கட்பிரபுவின் சவாலை ஏற்றுக்கொண்ட ஜெய் காதலி அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்து அப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் தோசை போட்டியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறேன் என்று சூர்யாவுக்கு தகவலும் தந்திருக்கிறார்.

அதேபோல் அஞ்சலி வெளியிட்டுள் செய்தியில், ’ம்ம்ம்... சுவையான தோசை ஜெ(ஜெய்). என் மனதுக்கு பிடித்தவர் சமைப்பதை பார்த்தபோது அருமையாக உணர்ந்தேன்’ என குறிப்பிட்டிருக்கிறார். 


Add new comment

Or log in with...