தங்கத்தில் மங்காத ஆர்வம்

 

பண மதிப்பிழப்புக்கு பிறகும் தங்க நகைகளை வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறையவில்லை என நடிகை தமன்னா தெரிவித்தார்.

பெங்களூரில் அண்மையில் மாரத்தஹள்ளியில் மலபார் தங்க நகைக் கடையைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கருப்புப் பணம் மற்றும் ஊழலை வேரறுக்க பிரதமர் மோடி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதன்மூலம் வர்த்தகம் நேர்மையாக நடக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பண மதிப்பிழப்புக்கு பிறகு தங்க நகை வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால்இ பண மதிப்பிழப்புக்குப் பிறகுதான் தங்க நகைகளை வாங்கும் ஆர்வம் மக்களிடம் பெருகியுள்ளது. இந்தியப் பெண்களுக்கு தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல நல்ல சேமிப்பும்கூட. எனவே தங்க நகைகளை வாங்க இந்தியப் பெண்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நேர்மையாக சம்பாதித்த பணத்தை சீரான முறையில் செலவிட தங்க நகைகளில் முதலீடு செய்கிறார்கள். தங்க நகைகளை வைத்திருக்கும் பெண்கள்இ பொருளாதாரரீதியாக தன்னிறைவு பெற்றுவருகிறார்கள் என்றார் அவர். அப்போதுஇ மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட் நிறுவனத் தலைவர் எம்.பி.அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
19 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...