ஆலையடிவேம்பில் நவீன புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் | தினகரன்


ஆலையடிவேம்பில் நவீன புதிய எரிபொருள் நிரப்பு நிலையம்

 

ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று வைபவ ரீதியாக (13) நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.நாராயணன் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவுத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டு நவீன முறையில் அமைக்கப்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.

நீண்ட காலமாக ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் கோரிக்கையாக அமைந்திருந்த இப்புதிய நிலையத்தின் திறப்பு விழாவினால் மக்கள் பெரிதும் நன்மையடைவுள்ளதுடன் பலநோக்கு கூட்டுறவுச்சங்கமும் புத்தெழிச்சி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

இச்செயற்பாட்டினை முன்னின்று செயற்படுத்திய தற்போதைய பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட இயக்குனர் சபையினருக்கும் கூட்டுறவு ஆணையாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மக்கள் நன்றியினை தெரிவித்தனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்


Add new comment

Or log in with...