எரிகாயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு | தினகரன்

எரிகாயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

 
சாவகச்சேரி சங்கத்தானை  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரிகாயங்களுக்கு உள்ளாகி நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று (12) மீட்கப்பட்டுள்ள குறித்த பெண், யோகநாதன் சிறிகலா எனும் 57 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த சடலம், மதியம் 12 மணியளவில்  அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சாவகச்சேரி பொலிசார்  குறித்த சடலத்தை மீட்டனர்.
 
குறித்த சடலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு, இன்று (13) பிரேத பரிசோதனை இடம்பெறும் என பொலிசார் தெரிவித்தனர்.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

Or log in with...