ரூ.500 கோடியில் சொகுசு சிறைச்சாலை அமைத்த மஹிந்த

 

இலங்கையில் அதி நவீன வசதிகளுடன் சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹம்பாந்தோட்டை அகுனுகொலபெலஸ்ஸ பகுதியில் குறித்த ஆடம்பரமான சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின் பல்வேறு சொகுசு கட்டடங்களை அமைத்திருந்தார் என்றும் அதில் ஒன்றே குறித்த சிறைச்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட பல சொகுசு மாளிகைகள் தொடரில் செய்திகள் வெளியாகும் நிலையில் தற்போது குறித்த சிறைச்சாலை தொடர்பிலும் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுதுள்ளன.குறிப்பாக 58 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கோடி ரூபா செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இந்த கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு பல கோடி மதிப்பில் குறித்த சிறைச்சாலையை மஹிந்த அமைக்க கரணம், "ஊழல் மோசடிகள் தொடர்பில் பிற்காலத்தில் கைது செய்யப்பட்டால் சொகுசாக வாழலாம் என்பதற்காகவா ? " என சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

"பல குற்றச்செயல்களை செய்து இருக்கும் குற்றவாளிகளுக்கு எதற்காக இந்த ஆடம்பரம் என்றும் கோடிகளை இவ்வாறு செலவழித்து விட்டு தற்போது வெளிநாடுகளிடம் வளங்களை கொடுப்பதாக மஹிந்த கூறுவது எந்த விதத்தில் நியாயம் " என சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
2 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...