தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் இன்று தேவை

 

நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் போராடிக் கொண்டிருக்கும்

தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் பேரெழுச்சிக் கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றுடன் பத்து நாட்களுக்கும் மேலாக கேப்பாப்புலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிப்பதற்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களுடைய தலைமைகள் எல்லாம் எங்கே போனது. எனவே அவர்களுக்கு சரியான புதிய தலைமை அவசியம்.

இதேவேளை, தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமாக இருந்தால் அவர்களது உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்

40 வருடங்கள் பல இலட்சம் மக்களின் உயிர்களை தியாகம் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்து நாங்கள் சேர்த்து வைத்த அவ்வளவு சொத்துக்களையும் பறி கொடுத்து விட்டு நாங்கள் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு இன்றும் நாங்கள் போர்க்கொடி உயர்த்த வேண்டிய சூழ் நிலையில் இருக்கின்றோம்.

மக்கள் மனசு வைத்தால் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஒன்றும் தோற்றுப் போனவர்களல்ல. நிச்சயமாக தமிழ் மக்கள் வெற்றியடைவார்கள் என்றார்

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

 

  

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 16 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...