மாலபே CEO மீது துப்பாக்கிச்சூடு; மயிரிழையில் தப்பினார் | தினகரன்


மாலபே CEO மீது துப்பாக்கிச்சூடு; மயிரிழையில் தப்பினார்

மாலபே தனியார் பல்கலைக்கழகம் (SAITM) மற்றும் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி, வைத்தியர் சமீர சேனாரத்ன
 
மாலபே தனியார் பல்கலைக்கழகம் (SAITM) மற்றும் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
 
வைத்தியர் சமீர சேனாரத்ன மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த நிறுவனத்திலிருந்து தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முற்பட்ட வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
முழு தலையையும் மூடும் வகையிலான தலைக்கவசம் அணிந்த இருவர்,  அவரது வாகனத்தை நோக்கி சராமரியாக துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த சமயத்தில் தான், வாகன இருக்கைக்கு அடியில் பதுங்கியதால் தெய்வாதீனமாக உயிர் பிழைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
அவர் பயணித்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...