சசிகலா கட்டாயப்படுத்தியதால் பதவி விலகினேன் -Video | தினகரன்

சசிகலா கட்டாயப்படுத்தியதால் பதவி விலகினேன் -Video

சசிகலா பதவியேற்பதில் சிக்கல்; இழுபறி நிலையில் தமிழக ஆட்சி

தன்னை கட்டாயப்படுத்தியதாலேயே, தான் இராஜினாமா செய்ததாக தமிழ் நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இரவு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிட மெளன அஞ்சலியை அடுத்து ஊடகவியலாளர்களுடன் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். (Video இணைப்பு)
 
 
சில உண்மை விவரங்களை தெரிவிக்க உள்ளேன். ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றவே தொடர்ந்து பதவியில் இருந்தேன்.
 
இந்நிலையில், தான் முதலமைச்சராக வேண்டும் என  சசிகலா  என்னிடம் வலியுறுத்தினர். நான் முதல்வராக இருக்கும் நிலையில் அவர், ஏன் என்னை அவமானப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
 
 
மேலும், சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் சேர்ந்து என்னைக் கட்டாயப்படுத்தியதால் பதவியை ராஜினா செய்தேன் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது எனவும், மக்களும் அதிமுக தொண்டர்களும் விரும்பினால் தனது இராஜினாமாவை வாபஸ் பெற தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இதேவேளை பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
 
 
ஓ. பன்னீர்செல்வத்திற்கு பதிலாக, அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்களுடன் சசிகலா மேற்கொண்ட அவசர சந்திப்பை அடுத்து பன்னீர்செல்வம் பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கட்சிக்கு எதிரான கருத்தை தெரிவித்ததால் இந்நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெற தயார் என பன்னீர்செல்வம் கூறிய நிலையில், தற்போது பதில் ஆளுநரான வித்யாசாகர் ராவ், சசிகலாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைப்பாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.
 
முதல்வர் ஒருவரே பகிரங்கமாக இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளதாலும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதோடு, அடுத்தவாரம் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ளமை தொடர்பிலும் ஆளுநர் ஆராயலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில், கட்சியின் இருபோக்கு நிலை, காபந்து அரசாங்கம் என்பவற்றை கருத்தில் கொண்டு, ஆட்சி கலைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

 


There is 1 Comment

The Government of India should impose the Governor's rule or ask the Chief Minister OPS to withdraw his resignation ASAP.

Pages

Add new comment

Or log in with...