காரில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி | தினகரன்

காரில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

வைப்பக படம்
 
இன்று (03) காலை ஹொரணை, இலிப சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தரித்து நின்ற காரில் இருந்த நபர் மீது  துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உயிரிழந்த நபர், ஶ்ரீ நிக நிமேந்திர மதகதிர எனும் இங்கிரியவைச் சேர்ந்த 48 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹொரண பொலிசார் தெரிவித்தனர்.
 
இது குறித்தான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

Add new comment

Or log in with...