ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' - Teaser | தினகரன்

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' - Teaser

 
சூரியாவின் இயக்கத்தில் ஜோதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் நேற்று (04) யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
குற்றம் கடிதல் திரைப்படத்தின் இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
 
கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த படத்தின் தயாரிப்பு பணிகளை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி இப்படத்தை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குறித்த படத்தின் முன்னோட்ட காட்சிகளை இது வரை 5 இலட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 
மகளிர் மட்டும் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி இதோ...
 

 


Add new comment

Or log in with...