ரஞ்சனின் வார்த்தை பிரயோகம் தவறானது | தினகரன்


ரஞ்சனின் வார்த்தை பிரயோகம் தவறானது

 

திவுலபிட்டியவில் இடம்பெறும் சூழல் பிரச்சினைகள் பற்றி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த விடயங்கள் நியாயமானவை. ஆனால் அவர் பிரதேச செயலாளருடன் ஆவேசமாகப் பேசியதை அனுமதிப்ப முடியாது என பிரதி அமைச்சர் டாக்டர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் அச்சுறுத்தப்பட்டது குறித்து வினப்பட்டது. இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது- திவுலபிட்டி பகுதியில் பாரிய அளவில் சூழல்நாசப்படுத்தப்படுகிறது.

இதனால் குடிநீர் பிரச்சினையும் தலைதூக்கியுள்ளது.

இந்தப் பிரச்சினையை முன்வைத்தது நியாயமானது. அதனை வரவேற்கிறோம். ஆனால் அவர் பேசிய விதத்தை அனுமதிக்க முடியாது. அரச அதிகாரி ஒருவருடன் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது.

அனுமதிபெற்றே மண் அகழ்வதாகக் கூறப்பட்டாலும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு வெளியிலும் மண் தோண்டி எடுக்கப்படுகிறது.

மண் அகழ்வதை இடைநிறுத்தி தற்பொழுது விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. சில அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...