தேடப்பட்டு வந்த 'மேன் பவர்' உப தலைவர் இங்கிரியவில் | தினகரன்

தேடப்பட்டு வந்த 'மேன் பவர்' உப தலைவர் இங்கிரியவில்

 
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த, டெலிகொம் மனித ஆற்றல் (Man Power) சங்கத்தின் உப தலைவர் எம்.எஸ். மங்கள என்பவர் இன்று (01) காலை இங்கிரியவில் மீட்கப்பட்டுள்ளார்.
 
இவர், கடந்த சனிக்கிழமை (28) கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு அங்கிருந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படும் நிலையில் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து தனது கணவர் வீட்டிற்கு வரவில்லை என இவரது மனைவி பிலியந்தலை பொலிசில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் இன்று (01) அதிகாலை, தன்னை கடத்திச்சென்ற சிலர், ஒன்றிலிருந்து இங்கிரிய பிரதேசத்தில் விட்டுச் சென்றதாக  பொலிஸில் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அவரை பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

Add new comment

Or log in with...