பஸ் விபத்து; 09 பேருக்கு காயம்; 05 மாடுகள் பலி | தினகரன்

பஸ் விபத்து; 09 பேருக்கு காயம்; 05 மாடுகள் பலி

 
தனியார் பேருந்து ஒன்று மாட்டு பட்டியுடன் மோதியதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 5 மாடுகள் உயிரிழந்துள்ளன. 
 
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (29) மாலையில் மொரட்டுவை நோக்கி புறப்பட்ட பேருந்து இரவு 9.30 மணியளவில் மாங்குளத்தைத் தாண்டி கொல்லர் புளியங்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் ஏ9 வீதியில் திடீரென வீதியைக் கடந்த  மாட்டு பட்டியின்மீது மோதியுள்ளதுது.
 
இவ்விபத்தில் பேருந்தில்  பயணித்த 9 பயணிகள் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். 
 
 
இந்த விபத்தில் 05 மாடுகள் உயிரிழந்துள்ளதோடு  10 மாடுகள் படுகாயமடைந்த நிலையில் எழும்ப முடியாத நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்தன. 
 
இதனையடுத்து படுகாயமடைந்த மாடுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
குறித்த விபத்தில் படுகாயமடைந்த பயணிகளில் சிலர், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
குறித்த விபத்து தெடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 

Add new comment

Or log in with...