Saturday, April 20, 2024
Home » Samsung – Warner Bros. Pictures ஒன்றிணைந்த 8K தரத்திலான திரைப்பட Trailer

Samsung – Warner Bros. Pictures ஒன்றிணைந்த 8K தரத்திலான திரைப்பட Trailer

by sachintha
September 27, 2023 1:08 pm 0 comment

பதினேழு (17) ஆண்டுகளாக உலகிலேயே முன்னணித் தொலைக்காட்சி தயாரிப்பாளரான Samsung Electronics, ஆனது Warner Bros. Pictures உடன் ஒரு அர்த்தபூர்வமான கூட்டுவணிகச் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது.

இக்கூட்டுவணிகச் செயற்பாட்டினைத் தனது நியோ QLED 8K திரைகளில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்பட Trailer களைக் காண்பிக்கின்றது.இதன் மூலம் சர்வதேச ரீதியில் 65,000 க்கும் மேற்பட்ட Retail Store களில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.

“இத்தொழில் சார் கூட்டானது 8K யினை உளீற்கும் ஒரு அற்புதமான முயற்சியாகும். இது NEO QLED 8K இன் சிறப்பியல்புகளினை வெளிக்கொணருகின்றது. அது மட்டும் அல்லாது சினிமா தரத்தினில் திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதற்கு அதன் பாவனையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றது” என்று Samsung Electronics Visual Display Business இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உப தலைவர் Cheolgi Kim அவர்கள் கூறினார்.

Samsun ஆனது Warner Bros. உடன் தனது கரங்களினை கோர்த்துக் கொண்ட நிகழ்வானது Ultra – Premium TV தொழில்நுட்பம் ஊடாக அதன் பாவனையாளர்கள் தமக்குப் பிடித்த திரைப்படங்களை முழு மனநிறைவுடன் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினையும் Samsung ஆனது பெற்றுத் தந்திருக்கின்றது.

8K Content இற்கான கேள்வியினைப் பரீட்சித்துப் பார்த்து அதன் தேவைதனை நன்கு புரிந்து கொள்ளும் முகமாக, Samsung மற்றும் Warner Bros. என்பன இந்த ஆண்டின் தொடக்கக் காலப் பகுதியிலேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 450க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை இஸ்தாபனங்களில் ‘Creed III’ Trailer ரைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக தமது கூட்டுவணிகச் செயல்பாட்டினைப் பரீட்சித்துப் பார்த்தனர்.

இம் முயற்சியானது சர்வதேச ரீதியாகப் பார்வையாளர்களிடமிருந்து ஏராளமான கவனத்தையும் விருப்பார்வத்தினையும் பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT