500 போலி ரூ. 500 நாணயத்தாள்களுடன் இருவர் கைது | தினகரன்

500 போலி ரூ. 500 நாணயத்தாள்களுடன் இருவர் கைது

 
புத்தள நகரில் போலி 500 ரூபா நாணயத்தாள்கள் 506 வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இரு சந்தேகநபர்கள் புத்தள பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கெப் வாகனமொன்றில் நபர் ஒருவர் போலி நாணய தாள்களுடன் செல்வதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து, குறித்த வாகனத்தை பின்தொடர்ந்து புத்தள நகரில் வைத்து சோதனையை மேற்கொண்டபோது 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 506 இனை கண்டுப்பிடித்தாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 
இன்று (24) புத்தள நகரில் இடம்பெற்ற சந்தைக்கு இந்த நாணயத்தாள்கள் எடுத்துச்செல்லப்பட்டபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். 
 
இதனையடுத்து, குறித்த நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய கணனி மற்றும் அச்சு இயந்திரம் உள்ளிட்டவற்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
 
இது தொடர்பான விசாரணைகளை புத்தள பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 
 
பதல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டிலிருந்து வந்துள்ள குறித்த நபர், கணனித் துறையில் சிறந்த பயிற்சி பெற்ற ஒருவர் எனவும், உள்நாடு, வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்த ஒருவர் எனவும், தற்காலிகமாக புத்தள, ரஜமாவத்தை பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
 

Add new comment

Or log in with...