விமலின் விசாரணையின்போது கூச்சலிட்டவருக்கு விளக்கமறியல் | தினகரன்

விமலின் விசாரணையின்போது கூச்சலிட்டவருக்கு விளக்கமறியல்

 
விமலின் விசாரணையின்போது கூச்சலிட்டவருக்கு விளக்கமறியல்
 
அரச வாகன முறைகேடு தொடர்பில் இன்று (24) விமல் வீரவங்ச மீது மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற விசாரணைகளின்போது, கூச்சலிட்டவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த வழக்கு நிறைவடையும் தருணத்தில், குறித்த நபர் எழுந்து நின்று, நீதவானை நோக்கி விரல் நீட்டியவாறு முன்னாள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதியமைச்சர் லசந்த அளகியவண்ண மற்றும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அசூ மாரசிங்கவையும் கைது செய்யுமாறு சத்தமிட்டு தெரிவித்தார்.
 
இதனையடுத்து, குறித்த நபரை நீதவான் கைது செய்யுமாறு உத்தரவிட்டதோடு, பின்னர் அவரையும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 
பாணந்துறை, ஶ்ரீ மேகானந்தா வீதியில் வசிக்கும் கம்பொலகே சுதேஷ் பிரேமலால் பொன்சேகா (48) என்பவருக்கே இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
(சுபாஷினி சேனாநாயக்க)
 
 

Add new comment

Or log in with...