தகவலறியும் சட்டம் பெப்ரவரி 03 முதல் அமுல் | தினகரன்

தகவலறியும் சட்டம் பெப்ரவரி 03 முதல் அமுல்

 
தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் அறியும் சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
குறித்த தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பிலான  வர்த்தமானி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டம் அமுலுக்கு வரும் தினம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (20) நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...