நெடுந்தீவு - குறிகட்டுவான்; புதிய படகுசேவை 'நெடுந்தாரகை' | தினகரன்


நெடுந்தீவு - குறிகட்டுவான்; புதிய படகுசேவை 'நெடுந்தாரகை'

 
நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்று (20) குறிகட்டுவானில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதுவர் பிறைசி ஹட்ஸன் ஆகியோர் கலந்து கொண்டு இப்படகு சேவையை ஆரம்பித்துவைத்தனர்.
 
 
 
நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஆகிய பகுதிகளின் மக்களின் வேண்டுகோளுக்கான இணங்க இச்சேவை பூர்த்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இப்படகு சேவைக்கான திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டன. இதற்காக ரூபா 120 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதோடு, இதில் 250 பேர் வரை பயணிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
 
 
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 
 

Add new comment

Or log in with...