முன்னாள் அமைச்சர் சரத் குமாரவிற்கு பிணை | தினகரன்

முன்னாள் அமைச்சர் சரத் குமாரவிற்கு பிணை

 
முன்னாள் மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, இன்று (20) பிணையில் விடுவிக்கப்ப்டார்.
 
கடந்த அரசாங்க காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கிய ரூபா 112 இலட்சத்தை (ரூ. 1.12 கோடி) மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஜனவரி 02 ஆம் திகதி பொலிஸ் குற்றவியல் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இது தொடர்பான வழக்கு, இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

There is 1 Comment

தவறு

Add new comment

Or log in with...