கெப் வாகனம் விபத்து; சகோதரர்கள் பலி | தினகரன்

கெப் வாகனம் விபத்து; சகோதரர்கள் பலி

 
கெப் ரக வாகனம் ஒன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இன்று (20) அதிகாலை 1.45 மணியளவில் தொடுவாவ நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று தெஹியத்தகண்டி -  வெவ்சிறிகம பகுதியிலுள்ள ஹேனானிகல கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இவ்விபத்தில், ஹேனாணிகம, நவ மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசிங்க பண்டார (36) மற்றும் செனரத் பண்டார (32) ஆகிய சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த கெப் வாகனம் மிக வேகமாக பயணித்துள்ள நிலையில், வாகனம் சாரதியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்காக தெஹியத்தகண்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகள தெஹியத்தகண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...