நீதிமன்ற அவமதிப்பு; ஈ-நியூஸ் ஆசிரியருக்கு அழைப்பாணை | தினகரன்

நீதிமன்ற அவமதிப்பு; ஈ-நியூஸ் ஆசிரியருக்கு அழைப்பாணை

 
லங்கா ஈ-நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
 
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 வழக்குகள் தொடர்பில் நீதிமன்றிற்கு ஆஜராகாமை தொடர்பில் அவருக்கு எதிராக, இன்று (19) உச்ச நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
 
கடந்த வருடம், வழக்கறிஞர் மதுர விதானகேவினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளிநாட்டிலுள்ளதாக தெரிவிக்கப்படும் அவருக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் சர்வதேச பொலிஸ் (Interpol) பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
ரிவிர பத்திரிகையின் ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரின் அடையாள அணிவகுப்பு இடம்பெறுவதற்கு முன்னர், குறித்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரேமரத்ன உதலாகமவின் புகைப்படத்தை குறித்த இணையத்தளத்தில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
குறித்த பிடியாணை நீதிக்கு புறம்பானது என குறித்த இணையத்தளத்தில் தெரிவித்திருந்த அவர் குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றிற்கு சமூகம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...