ஹோமாகம ரயில் பாதையில் துப்பாக்கிச்சூடு | தினகரன்

ஹோமாகம ரயில் பாதையில் துப்பாக்கிச்சூடு

 
ஹோமாகம ரயில் பாதையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
 
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மீகொட - காமினிபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த நபர், வழக்கொன்று தொடர்பான விசாரணைக்குச் சென்று திரும்பும் வழியில் மோட்டார்சைக்கிளில் வந்த நபரொருவரினாலேயே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 

Add new comment

Or log in with...