ட்விற்றரிலிருந்து விஷால் வெளியேற்றம் | தினகரன்

ட்விற்றரிலிருந்து விஷால் வெளியேற்றம்

 
ட்விற்றர் தளத்திலிருந்து தனது கணக்கை முடக்கியுள்ளார் (Deactivate)  தென்னிந்திய நடிகர் விஷால்.
 
தமிழ் திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் ட்விற்றர் தளத்தில் தகவல்கலை பதிவு செய்து வருகின்றனர். ட்விட்டரில் புதிய படங்கள் ஒப்பந்தம், படப்பிடிப்பு தளம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் நிலவும் விவசாயிகள் மரணம், ஜல்லிக்கட்டு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் ட்விற்றர் தளத்தில் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
அவ்வாறு ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்த நடிகர்களில் விஷாலும் ஒருவர்.
 
ஆனால், தான் கூறிய கருத்துகள் யாவும் தவறாக சித்திரிக்கப்பட்டு செய்திகளாக பல்வேறு இணையங்களில் வெளியானதாக விஷால் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். 
இது தொடர்பாக தமிழக காவல்துறையிடமும் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், இப்பிரச்சினைகள் காரணமாக இனிமேல் தான் சமூக வலைதளத்தில் இடம்பெறப் போவதில்லை என்று முடிவுக்கு வந்துள்ள விஷால், தன்னுடைய ட்விற்றர் கணக்கான @VishalKOfficial என்பதை முடக்கியுள்ளார்.
 
இவ்வாறானதொரு விவகாரத்தில் த்ரிஷாவும் தன்னுடைய ட்விற்றர் கணக்கை மூடிவிட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...