GSP+: 58 நிபந்தனைகளில் எவ்வித உண்மையும் இல்லை | தினகரன்


GSP+: 58 நிபந்தனைகளில் எவ்வித உண்மையும் இல்லை

 
இலங்கைக்கு GSP+ வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கு மிகவும் அபாயகரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ள செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
 
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
இலங்ககக்கு GSP+ வரிச் சலுகையை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது இடம்பெறும் மறுசீரமைப்பு விடயங்களை ஊக்குவிக்கும் வகையில், ஐரோப்பிய சந்தையில் இலங்கை நுழைவதற்கான வாய்ப்பை விரிவாக்கும் நோக்கிலேயே, ஒன்றியம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவித்திருந்தது.
 
அது, இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் வகையிலான உதவியாக அன்றி, தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டில் நல்லாட்சி, மனித உரிமை மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை நிலைநாட்டுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட, குறித்த ஊடக அறிக்கையில் எந்தவொரு நிபந்தனை மீறல் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை என்பதோடு, நிலைபேறான அபிவிருத்தி, மனித உரிமை மற்றும் நல்லாட்சி தொடர்பில், இலங்கை கொண்டுள்ள ஆழ்ந்த அர்ப்பணிப்பை பாராட்டுவதை அடிப்படையாகக் கொண்டு இச்சலுகையை வழங்குவதற்கு ஆலோசனை செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்விடயம் தொடர்பில் இடம்பெற்ற இரு தரப்பு மற்றும் பல்தரப்பு பேச்சுவார்த்தைகளில், மனித உரிமை மற்றும் நல்லாட்சி தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதோடு, ஐரோப்பிய ஒன்றியம், குறித்த நிலைப்பாட்டுக்கு இணங்கியுள்ளது என குறிப்பிடலாம்.
 
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு...
 
 


Add new comment

Or log in with...