சம்மாந்துறையில் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி | தினகரன்


சம்மாந்துறையில் சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி

 
சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்மாந்துறை - மலயடிக்கிராமத்தில் இடம்பெற்ற இக்கொடூரத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
நேற்று (12) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மருதமுனையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த சிறுவனுடன் விளையாடிக்கு கொணடிருந்த மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 

Add new comment

Or log in with...