இஸ்ரேல் துருப்புகளால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை | தினகரன்

இஸ்ரேல் துருப்புகளால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

 

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் அல் பாரா அகதி முகாமில் இஸ்ரேல் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பலஸ்தீனர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய உளவுப் பிரிவு அதிகாரிகள், 32 வயதான முஹமது அல் சாலிஹியின் வீட்டில் சோதனையிட முயன்றபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன மக்களின் கட்சி உறுப்பினர் காலித் மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய படைகள் தமது வீட்டுக்குள் நுழைந்து அனைத்தையும் சேதப்படுத்துவதைக் கண்டு அல் சாலிஹி மற்றும் அவரது தாய் அதிர்ச்சி அடைந்திருப்பதாக மன்சூர் தெரிவித்தார்.

“உள்ளே நுழைந்தவர்கள் கொள்ளையர்கள் என்று நினைத்து முஹமது அவர்கள் மீது சத்தம்போட ஆரம்பித்த விரைவிலேயே தனது வயதான தாய் பார்த்திருக்க நெருங்கிய இடைவெளியில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது” என்று மன்சூர் சம்பவம் பற்றி விபரித்துள்ளார்.

இதன்போது சாலிஹியின் மீது ஆறு துப்பாக்கி வேட்டுகள் செலுத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் உறுதி செய்துள்ளது. எனினும் கொல்லப்பட்ட பலஸ்தீனர் இஸ்ரேலிய வீரர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. 


Add new comment

Or log in with...