அங்குரார்ப்பண உதைபந்தாட்ட போட்டியில் கிறீன் மெக்ஸ் வெற்றி | தினகரன்

அங்குரார்ப்பண உதைபந்தாட்ட போட்டியில் கிறீன் மெக்ஸ் வெற்றி

 

மருதமுனையில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆரம்ப உதைபந்தாட்டப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் தன்னை எதிர்த்து ஆடிய கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழக சி அணியினரை (1-0) கோல்களால் வெற்றி கொண்டது. இரண்டாவது நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய கல்முனை சனிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் தன்னை எதிர் கொண்ட கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழக

ஏ அணியினைரை (2-0) கோல்களால் தோற்கடித்தது.

மூன்றவது நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்ட கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழக யு அணியினர் தன்னை எதிர்த்து ஆடிய காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினரை (1-0) கோல்களால் வெற்றி கொண்டனர்.

கிறீன்மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்;.எஸ்.எம். நாஸிர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவிலும், பரிசளிப்பு விழாவிலும் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினரும், மருதமுனை ஈஸ்டன்யூத் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான எம்.எஸ்.உமர் அலி, பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன சிரேஷ்ட உபதலைவர் யு.எல். றமீஸ், சம்மேளனப் பொருளாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப், என்.எம். அனீஸ் அஹமட், ஏ.எல்.எம். அஸ்லம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

(கல்முனை சுழற்சி நிருபர்) 


Add new comment

Or log in with...