ஊவா ஐ.தே.க உறுப்பினர்கள் சத்தியாக்கிரகம் | தினகரன்

ஊவா ஐ.தே.க உறுப்பினர்கள் சத்தியாக்கிரகம்

 

ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று(10) மாகாண சபைக்கு முன்பாக சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாகாண சபையினால் வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்களில் தங்கள் தரப்பிற்கு இருட்டடிப்பு இடம்பெறுவதாக தெரிவித்தே இந்த சத்தியாக்கிரகம் மேற்கொள்ளப்பட்டது.

மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இவர்கள் போராட்டம் நடாத்தினர்.மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் ரா.மு.ரத்நாயக, எம்.சச்சிதாநந்தன்,கே.ருத்திர தீபம் உள்ளிட்ட ஐ.தே.க.மாகாண சபை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.மாகாண சபை அமர்வு நேற்று (10) இடம் பெற்றபோது சபை நடவடிக்கைகளை பகிஷ்கரித்து இவர்கள் சத்தியாக்கிரயத்தில் ஈடுபட்ட்டனர்.

ஊவா சுழற்சி நிருபர் 


Add new comment

Or log in with...