மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைப்பு | தினகரன்

மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைப்பு

 

ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன் படி 49 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 44 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மண்ணெண்ணெய் விலையை 5 ரூபாவினால் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது.இதற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது

2015 ஆம் ஆண்டு 81 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் விலை முதலில் 16 ரூபாவினால் குறைக்கப்பட்டது.அதன் பின்னர் பல தடவைகள் மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டமை தெரிந்ததே. (பா) 


Add new comment

Or log in with...