புதிய வாரிசு லுத்ஃபுதீன் | தினகரன்

புதிய வாரிசு லுத்ஃபுதீன்

 

கோ டம்பாக்கத்தின் புதிய வாரிசு நடிகர். பறந்து செல்ல வா படத்தின் மூலம் ஹீரோவாக தடாலடி என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகர் சங்கத் தலைவரின் மகன் லுத்ஃபுதீன்.

டொக்டரோட மகன் டொக்டர் என்பதைப் போல நடிகரோட மகன் என்பதால் நடிக்க வந்துட்டீங்களா?

நொட் லைக் தட். அதே நேரம் மத்தவங்க அப்படி நினைக்கிறதிலும் தவறு எதுவுமில்லைன்னுதான் சொல்லுவேன். விருமாண்டி சண்முகராஜன், அப்பாவுக்கு நல்ல நண்பர். சைவம் படத்துக்கு நடிகர்களை அவர்தான் தேர்வு செய்துக்கிட்டிருந்தார்.

அப்போ ஒருமுறை எதேச்சையா என்னைப் பார்த்த அவர், உன்னாலே நடிக்க முடியும், ட்ரை பண்ணுன்னு சொல்லி டைரக்டர் விஜய் அலுவலகத்துக்கு அனுப்பி வெச்சாரு. என்னை எங்கே செலக்ட் பண்ணப் போறாங்கன்னு அவநம்பிக்கையோடுதான் போனேன். ஆனா ஒடிஷனில் திருப்தி அடைஞ்ச விஜய், என்னை சைவம் படத்தில் நடிக்க வெச்சாரு. தெரிஞ்சோ தெரியாமலேயோ நடிக்க வந்துட்டேன்.

நடிப்பு உங்க நோக்கமில்லைன்னா, என்னவாகலாம்னு திட்டமிட்டு இருந்தீங்க...?

சின்ன வயசுலேயிருந்தே என்னை படிப்பு பெருசா ஈர்க்கலை. . பாடப் புஸ்தகத்துலே இருக்குறதை படிச்சி அப்படியே தேர்வுலே பேப்பர்லே எழுதற தேர்வுமுறையை நான் ஆதரிக்கலை. சொந்தமா யோசிக்க விடாம இந்த முறை தடுக்குதுன்னு நெனைக்கிறேன். அப்பா, அம்மா கொஞ்சம் கண்டிப்பா இருந்ததாலேதான் ஸ்கூல் படிப்பையே முடிச்சேன். ஓவியம், 2டி அனிமேஷன்.... இதுமாதிரி கலை தொடர்பான ஆர்வம் எனக்கு இருந்தது.

வீட்டுலேயும் இதை என்கரேஜ் பண்ணினாங்க. ஸ்கூல் முடிச்சதும் மலேஷியாவுக்கு அனிமேஷன் படிக்கலாம்னு போனேன். எதிர்காலத்தில் பெருசா படம் பண்ணணும்னு அப்போ ஆர்வம் ஏற்பட்டது. அங்கே போனப்போ எனக்கு மியூசிக் மேலே ஆர்வம் வந்தது. நானே எதிர்பார்க்காம இப்போ நடிகன் ஆயிட்டேன். குறிப்பிட்ட வேலைன்னு இலட்சியமில்லாமே அடிக்கடி என் ஆர்வம் மாறிக்கிட்டிருந்தாலும் என்னோட நோக்கம் சினிமாத்துறையில் வேலை பார்க்கணும்னுதான் எப்பவுமே இருந்தது.

நாயகனா நடிச்ச அனுபவம்?

பெரிய சவால் இருக்கும்னுதான் நெனைச்சேன். ஆனா பறந்து செல்ல வா நடிச்சப்புறம் அதுவும் ஒரு கேரக்டர் என்கிற ஃபீல் வந்திருக்கு. சிங்கப்பூருக்கு போய் இரவு, பகலா உழைச்சோம். கூட நடிச்ச நரேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ரெண்டு பேருமே பக்கா புரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட்ஸ். நரேலைவிட ஐஸ்வர்யாவோட நடிக்கிறப்போதான் கொஞ்சம் நெர்வஸா இருந்தது. போகப் போக சரியாயிடிச்சி.

அப்பா என்ன சொல்லிக் கொடுத்தாரு?

டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை செய்யுறதுதான் உன்னோட வேலைன்னு சொல்லியிருக்காரு. அப்பா எனக்கு எதையும் பாடமா சொல்றதில்லை. அவரைப் பார்த்து நானே கத்துக்கறேன். 


Add new comment

Or log in with...