ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டதிருத்தம் | தினகரன்

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டதிருத்தம்

 

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினரிடம் கருத்து கேட்கப்படும். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். காளைகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது” என தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...