எல்லை நிர்ணய மேன்முறையீட்டு அறிக்ைக 17 இல் கையேற்பு | தினகரன்

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு அறிக்ைக 17 இல் கையேற்பு

 

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை எதிர்வரும் (17) தன்னிடம் கையளிக்குமாறு உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விகிதாசார முறையின் கீழ் நடத்த எந்தவொரு கட்சியும் இணங்கவில்லை யென  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் மூவர் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் அறிக்கையை பெற்றுக் கொண்டால், அது நாட்டின் சட்டத்தை மீறும் செயலாகுமெனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்ைக கடந்த வருட இறுதியில் அமைச்சரிடம் கையளிக்கப்பட இருந்தது. அமைச்சர் வெளிநாட்டில் இருந்த நிலையில் பதில் அமைச்சரிடம் இந்த அறிக்ைக கையளிக்கப்பட இருந்தது. அவர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் அமைச்சர் தனது பயணத்தை சுருக்கி நாடு திரும்பியிருந்தார்.

அமைச்சரிடம் அறிக்ைக கையளிக்கப்பட்ட போது அதில் ஜவரில் இருவரின் கையொப்பங்கள் இல்லை என அமைச்சர் அதனை நிராகரித்திரந்தமை தெரிந்ததே. 


Add new comment

Or log in with...