Friday, March 29, 2024
Home » அதிதூதர்களான புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் பெருவிழா

அதிதூதர்களான புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் பெருவிழா

திருச்சபை 29ல் சிறப்பிப்பு

by gayan
September 26, 2023 11:34 am 0 comment

“நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (திபா 91:11).

திருச்சபையானது அதிதூதர்களான புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோரின் பெருவிழாவை எதிர்வரும் கொண்டாடுகிறது. அதி தூதர்கள் நமக்கு எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு நமக்காக பரிந்துபேசுபவர்கள்; நமக்கு என்றும் துணையாய் இருப்பவர்கள்; துன்பத்திலிருந்து காப்பவர்கள்.

மேலும் கடவுள் படைத்தவைகளில் சிறந்தவை எனப் போற்றப்படுவோர் வானதூதரும்மனிதரும் மட்டும்தான்.பரிசுத்த வேதாகமத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை வானதூதர்களின் பணிகளை பல இடங்களில் நாம் காணலாம். சிறப்பாக இறைவன் திருமுன் நின்று பணிபுரியும் ஏழு வானதூதர்களில் முதன்மையான மூன்று தூதர்களை நாம் சிறப்பிக்கினறோம்.முதலாவதாக மிக்கேல் அதிதூதர்: மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு “கடவுளுக்கு நிகர் யார்?” என்பது பொருள். இறைவனுக்கு எதிராக சிந்தித்த லூசிபரையும்அவன் தோழர்களையும் அதிதூதர் மிக்கேல் நல்ல தூதர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களை நரகத்தில் வீழ்த்தினார். அதனால் அவர் தலைமை தூதர் ஆனார்.

அவரைக் குறித்து தானியேல் நூலிலும்திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். இவரே நம் திருத்தந்தையின் காவல் தூதரும்நற்கருணையின் பாதுகாவலரும் ஆவார்.இரண்டாவதாக கபிரியேல் அதிதூதர்: கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு “கடவுளின் ஆற்றல்” என்பது பொருள். ஆறுதல் தரும் செய்திகளை விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு கொண்டுவருபவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவுக்கும்இறைமகன் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கும் அறிவித்தவர். அதனால் இவர் நற்செய்தியின் தூதர் எனவும் அழைக்கப்படுகிறார்.மூன்றாவதாக ரஃபேல் அதிதூதர்: ரஃபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு “கடவுள் குணமளிக்கிறார்” என்பது பொருள். இவரே நோயாளிகளுக்கும்பயணிகளுக்குமான பாதுகாவலராக இருக்கிறார். இவரைக் குறித்து தோபித்து நூலில் வாசிக்கின்றோம். பெரிய தோபித்துவுக்கு பார்வை கிடைக்கவும்அவருடைய மகனுக்கு வழித்துணையாக இருந்து நல்ல மனைவி கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவரே.

ஆதலால் இறைவனின் திருமுன் நின்று அவருக்குப் பணிபுரிந்தும்நமக்கும் தீமையை வெல்வதற்கான ஆற்றலையும்ஆறுதல் செய்தியையும்குணத்தையும் தரும் இத் தூதர்களைப் போன்று நாமும் இறைவனுக்கு மட்டுமே பணிபுரிந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (திபா 91:11).

அருட்தந்தை:

மரிய அந்தோனிராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT