அமெரிக்க ஜனாதிபதி பதவி குடும்ப வர்த்தகம் அல்ல | தினகரன்

அமெரிக்க ஜனாதிபதி பதவி குடும்ப வர்த்தகம் அல்ல

 

குடும்ப வர்த்தகத்தை நடத்துவது போல் நாட்டை வழிநடத்த முயற்சிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.

டிரம்ப் அமெரிக்க நிர்வாக கட்டமைப்பை மதிக்க வேண்டும் என்று ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒபாமா வலியுறுத்தியிருந்தார்.

“நீங்கள் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் உலகின் மிகப்பெரிய நிர்வாகத்திற்கு பொறுப்புதாரி” என்றும் ஒபாமா அந்த பேட்டியில் டிரம்பிடம் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கும் தொழில் நிறுவனத்திற்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

கணனி வழி ஊடுருவல்கள் மற்றும் தவறான தகவல்கள் ஜனநாயகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை தான் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக ஒபாமா இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற ஒரு விரிவான கணனி வழி ஊடுருவல்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தானாகவே உத்தரவு பிறப்பித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பானது முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை குறைவாக மதிப்பிடவில்லை என்றும், ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்றும் ஒபாமா ஒப்புக்கொண்டுள்ளார். 


Add new comment

Or log in with...