ஏழு விருதுகளை வென்று ‘லா லா லேண்ட்’ சாதனை | தினகரன்

ஏழு விருதுகளை வென்று ‘லா லா லேண்ட்’ சாதனை

 

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்ற 74ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், லா லா லேண்ட் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் விருதை வென்று சாதனைப் படைத்தது.

ஹொலிவுட் பாரின் ப்ரெஸ் அசோசியேஷன் எனும் அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் வருடா வருடம் கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்றழைக்கப்படுகிறது.

ஒஸ்கார் விருதுக்கு இணையாக போற்றப்படும் இந்த விருதுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து முடிந்தது.

இந்த விழாவில் லா லா லேண்ட் 7 விருதுகளை வென்றது. அதிகபட்ச விருதுகளை வென்ற திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகை என அனைவரும் விருதுகளை வென்றனர்.

முன்னதாக 1975ஆம் ஆண்டு வெளியான ஒன் ப்ளு ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் மற்றும் 1978ஆம் ஆண்டு வெளியான மிட்நைட் எக்ஸ்பிரஸ் படங்கள் 6 விருதுகள் பெற்றது தான் சாதனையாக இருந்தது. 


Add new comment

Or log in with...