நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகம் | தினகரன்

நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகம்

 

நோக்கியா நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை சீனாவில் வெளியிட உள்ளது. உள்ளூர் இணைய சில்லரை பெரு நிறுவனமான ஜேடி.கொம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது.

இந்த கையடக்க தொலைபேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கியா 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

லொஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது.

நோக்கியா நிறுவனமானது தன்னுடைய பெயரில் தற்போது கையடக்க தொலைபேசிகளை உற்பத்தி செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னுடைய வியாபார குறியை மற்றோரு பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டி குளோபல் பயன்படுத்த உரிமம் அளித்துள்ளது. வெளியாகும் இந்த ஸ்மார்ட் போன்கள் அடிப்படை அம்சங்களை காட்டிலும் கூடுதல் அம்சங்கள் அதிகமாகவே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...