ட்ரிபள் செவன் அணி வெற்றி | தினகரன்

ட்ரிபள் செவன் அணி வெற்றி

 

புத்தளம் நகரின் மிக பிரபலமானதும், மிகப்பழைமை வாய்ந்த அணியுமான போல்டன் கால்பந்தாட்ட அணி, மிக நீண்ட காலம் புத்தளத்தில் தோல்வியில் துவண்டு போயிருந்த ட்ரிபள் செவன் அணியிடம் வீழ்ந்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் காகில்ஸ் புட்சிட்டி எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட போட்டி தொடரின் ஆட்டம் ஒன்றிலேயே போல்டன் அணி இந்த தோல்வியை தழுவியுள்ளது.

இந்த போட்டியானது அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இடைவேளைக்கு முன்பாக இரு தரப்பும் கோல்களை போட எத்தனித்தும் கோல் போட முடியவில்லை.

எனினும் இடைவேளைக்கு பின்னர் ட்ரிபள் செவன் அணி வீரர் எம். சபாத் பெற்றுக்கொண்ட கோலானது அவ் அணியின் வெற்றி கோலாக மாறியது. போட்டி நிறைவில் அந்த ஒரு கோலினால் ட்ரிபள் செவன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.ஏ.எம். பஸ்ரின் மற்றும் எம்.ஆர்.எம். ஜஹீஸ் ஆகி யோர் கடமையாற்றினர்.

புத்தளம் தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...