சம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச் | தினகரன்

சம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்

 

மூன்று செட் வரை நீடித்த ஆட்டத்தில் 2017ம் ஆண்டின் முதலாவது பட்டம் வென்றார் நோவக் ஜோக்கோவிச்.

கடந்த 7ம் திகதி டோகாவில் நடந்த கட்டார் பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் இரு நிலை வீரர்களான அண்டி மர்ரே மற்றும் நோவக் ஜோக்கோவிச் ஆகியோர் போட்டியிட்டனர்.

முதல் செட்டை ஜோக்கோவிச் 6-3 என வெல்ல 2வது செட்டை மர்ரே 7-5 என வெற்றி கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த இறுதி செட்டில் ஜோக்கோவிச் 6-4 என வென்றார்.

3வது செட்டில் 2-3 என்று பின்னணியில் நின்ற ஜோக்கோவிச் தொடர்ச்சியான 3 புள்ளிகளை பெற்று 5-3 என்று முன்னிலை பெற்று இறுதியில் 6-4 என்று இறுதி செட்டை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றி மூலம் நடப்பு சம்பியன் நோவக் ஜோக்கோவிச், தன்னிடமிருந்து உலகின் முதல் இடத்தை பறித்த அண்டி மர்ரேயை வீழ்த்தி 2017ம் ஆண்டின் முதலாவது சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இத்தோல்வியால், ATP போட்டிகளில் முதல் நிலை வீரர் அண்டி மர்ரேயின் 28 தொடர்ச்சியான வெற்றிகள் என்ற பயணம் முடிவுக்கு வந்தது.

இவ்வருடத்தின் 1வது பட்டத்தை வென்ற நோவக் ஜோக்கோவிச்க்கு விளையாட்டு.கொம் இன் வாழ்த்துகள். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஆட்டம் வெகு தொலைவில் இல்லை என்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. 


Add new comment

Or log in with...