ரூ. 2.8 கோடி வெளிநாட்டு பணத்துடன் ஈரான் நாட்டவர் கைது | தினகரன்

ரூ. 2.8 கோடி வெளிநாட்டு பணத்துடன் ஈரான் நாட்டவர் கைது

 
ரூபா 2 கோடி 80 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட ஈரான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பயண பொதியில் சூட்சமமாக மறைத்த நிலையில் குறித்த நபரிடமிருந்து அப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
 
இதன்போது, குறித்த பொதியிலிருந்து சுமார் ரூபா 2 இலட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
நேற்று (09) இரவு கட்டார் செல்லவிருந்து விமானத்தில் பயணிக்கவிருந்த ஈரான் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Add new comment

Or log in with...