ஜனநாயக விழுமியங்களை உதாசீனம் செய்யப் போகிறாரா டொனால்ட் ட்ரம்ப்? | தினகரன்

ஜனநாயக விழுமியங்களை உதாசீனம் செய்யப் போகிறாரா டொனால்ட் ட்ரம்ப்?

 

ஜனநாயகத்துக்காக உலகம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமென 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி ஜேர்மனி மீது போர் தொடுக்குமாறு அமெரிக்க காங்கிரசைக் கோரும் தனது உரையில் குறிப்பிட்டார் வுட்ரோ வில்சன்.

அவருடைய சந்ததிக்குப் பின்னர் பிராங்க்ளினும், வின்ஸ்டன் சேர்ச்சிலும் அத்திலாந்திக் ஒப்பந்தத்தை வெளியிட்டு இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த தமது நேச நாடுகளுக்கு விடுத்த செய்தியில் தமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் விரும்பும் அரசமைப்பைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினர்.

அன்று முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியில் இருந்த எல்லோருமே தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு வெளிநாடுகளில் ஜனநாயகத்தையும் தனிநபர் உரிமைகளை பரவச் செய்தலிலுமேயே தங்கியுள்ளது என வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

ஆனால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கோ அந்த நம்பிக்கை இல்லை. ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், அரசியல் எதிரிகள் என எல்லோரையுமே அவர் தாக்கிப் பேசுவது ஜனநாயகத்தின் மீது அவருக்குள்ள வெறுப்பையே காட்டுகிறது.

அகதிகளை ஏற்றுக்காள்ளும் சர்வதேச சட்டக் கடப்பாட்டிலோ அல்லது சித்திரவதை செய்யாமலிப்பது என்ற கொள்கையிலோ அவர் சற்றேனும் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் ஜனநாயக உரிமைகள் குறித்த விடயத்தில் அவர் இன்னும் அதிகமாகவே அலட்சியம் செய்கிறார்.

ரஷ்ய பிரதமர் புட்டின், துருக்கியின் எர்தொகான், எகிப்தின் அல்சீசி போன்ற வெளிநாட்டுத் தலைவர்களை அவர் புகழ்ந்து பேசியிருக்கிறார். இவர்கள் அனைவருமே தமது விமர்சகர்களை சிறையிலடைத்தும், புதைகுழிக்கு அனுப்பியும் கொடுங்கோல் ஆட்சி புரிபவர்களே.

இஸ்ரேலில் குடியிருப்பு மனைகள் அமைக்கப்படுவதைக் கண்டிக்கும் ஐ. நா. தீர்மானத்தைக் கைவிடும்படி எகிப்தின் அல்சீசியை அவர் நயமாகப் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

தற்போது தனது அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார். அதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கல் பிளின்னும், பாதுகாப்பு செயலாளராக ஜேம்ஸ் மெட்டிசும் உள்ளனர். இவர்கள் முன்பு அமெரிக்க இராணுவத்தில் ஜெனரல் பதவியில் இருந்தவர்கள். அவருடைய இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படவுள்ள ரெக்ஸ் டில்லர்சன் பெரும் எண்ணெய் நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றுகிறார்.

இவர்கள் மூவருமே வுட்ரோ வில்சனின் கொள்கைக்கு ஆதரவாக செயற்படப் போவதில்லை. இராணுவத்தில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் வெளிநாட்டுத் தலைவர்களின் இராணுவ, பொருளாதார மூலோபாயங்கள் மீதே அவர்களுடைய கவனத்தை அதிகமாக பதிய வைக்கும்.

அவர்களில் எவருமே டொனல்ட் ட்ரம்பின் மனதில் உள்ளதும் சர்வாதிகாரிகளுக்கு பிடித்த சொல்லுமான ‘காழ்ப்புணர்ச்சி’க்கு எதிராக நடந்துகொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவின் உலக சீர்திருத்த அமைப்பும் வெளிநாடுகளைவிட உள்நாட்டில் ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றுவதுதான் அமெரிக்காவின் நலன்களுக்கு நல்லது எனக் கூறுகின்றது. எனவே, இனிவரும் ஆண்டுகளில் அமெரிக்கா ஜனநாயக விழுமியங்களை மதிக்கிற நாடாக இருக்க விரும்பாது.

ஜேம்ஸ் ட்ரோப்... 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...