பாவனைக்கு உதவாத 120 கிலோ இறைச்சி மீட்பு | தினகரன்

பாவனைக்கு உதவாத 120 கிலோ இறைச்சி மீட்பு

 
யாழ்ப்பாண மாநகர சபையின்  ஆளுகைக்குட்பட்ட பண்ணையில் உள்ள மாட்டிறைச்சி கடையில் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு  உதவாத 120 கிலோ நிறையுடைய இறைச்சி மற்றும் குடல்கள் சுகாதாரப் பகுதியினரால் நேற்று (08)  கைப்பற்றப்பட்டன. 
 
 
கோழிக் கால்கள் மாட்டுக் கால்கள் கொண்ட கழிவுகளும் பல நாட்களாக வைத்திருந்த இறைச்சிகளுடன் காணப்பட்டமை சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
 
மாட்டிறைச்சி கடையில் குளிர்சாதனப் பெட்டியில் மாதக் கணக்காக சேமித்து வைக்கப்பட்ட பாவனைக்கு உதவாத குடல், இறைச்சி என்பன பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
 
 
அரம்பத்தில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்கள் பணிகளை செய்யவிடாது இறைச்சி  உரிமையாளர்கள் கத்திகளுடன் மிரட்டியுள்ளனர். 
 
பின்னர் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளை அடுத்தே, பாவனைக்கு  உதவாத இறைச்சிகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
 
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 

Add new comment

Or log in with...