258 கைதிகளுக்கு பொது மன்னிப்பு | தினகரன்

258 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று 2 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 258 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
சிறு குற்றங்கள் புரிந்தவர்கள், தண்டப்பணம் செலுத்த முடியாத 258 பேரே நாடாளாவிய ரீதியில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில் யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த இரு கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
சிறுகுற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த இரு கைதிகளே பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (08) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 

Add new comment

Or log in with...