தமிழ் மொழி மூலம் சிறந்த பெறுபேறுகள் இவர்களுக்கு (Update) | தினகரன்

தமிழ் மொழி மூலம் சிறந்த பெறுபேறுகள் இவர்களுக்கு (Update)

 
றிஸ்வான் சேகு முகைதீன்
 
இம்முறை வெளியான க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நகரப்புற பாடசாலைகளிலும் பார்க்க கிராமப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில் அகில  இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் சிறந்த பெறுபேறுகள் பெற்றவர்கள் விபரம் வருமாறு...
 
பொறியியல் தொழில்நுட்பம்
கனகசுந்தரம் யதுர்ஷஜன் - யாழ்ப்பாணம், சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி - அ.இ. முதலிடம்
 
உயிரியல் 
ரொஷேன் அக்தார் - திருகோணமலை - கிண்ணியா மத்திய கல்லூரி -  அ.இ. 2 ஆம் இடம் (தமிழ் மொழிமூலம் முதலிடம்)
 
க்லேரின் திலூஜன் - கல்முனை - காமல் ஃபாதிமா கல்லூரி - அ.இ. 3ஆம் இடம் (தமிழ் மொழிமூலம் இரண்டாமிடம்
 
கலைப் பிரிவு
பத்மநாதன் குருபரேஷன் - யாழ்ப்பாணம் - மானிப்பாய் இந்து கல்லூரி - அ.இ. 2 ஆம் இடம் (தமிழ் மொழிமூலம் முதலிடம்)
 
உயிரியல் தொழில்நுட்பம் 
இல்யாஸ் பாத்திமா அரோஸா - ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயம் - அ. இ. 3 ஆம் இடம் (தமிழ் மொழிமூலம் முதலிடம்)
 

 
2016 உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியாகின
 
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
 
பரீட்சை முடிவுகளை 
அல்லது
 
எனும் இணையத் தளங்களில் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அல்லது SMS மூலம் கையடக்க தொலைபேசி வழியாக பரீட்சை பெறுபேறுகளை அறிந்துகொள்ள EXAM இடைவெளி AL16 இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 இற்கு அனுப்புவதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும். தகவல் திணைக்களத்தின் மூலம்  குறித்த சேவை வழங்கப்படுகின்றது.
 
கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்
 
EXAMS இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 
 
Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Hutch - 8888
Mobitel - 8884
 
குறிப்பிட்ட வலையமைப்பின்  இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.
 
2016 ஓகஸ்ட் 02 ஆம் திகதி இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 315,605 பேர் பரீட்சை எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தனர். 
 
நாடு முழுவதிலுமுள்ள 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு, 240,991 பேர் பாடசாலை ஊடாகவும் 74,614 பேர் தனிப்பட்ட ரீதியிலும் விண்ணப்பத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...