வசீம் தாஜுதீனுடன் வாகனத்தில் சென்ற மற்றவர் யார்? | தினகரன்

வசீம் தாஜுதீனுடன் வாகனத்தில் சென்ற மற்றவர் யார்?

 

19ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொட்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்..

வசீம் தாஜூதீன், படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவருடைய வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து இன்னொரு நபர் பயணித்திருப்பது தொடர்பாக தெரியவந்துள்ளது என்று சட்டமா அதிபர் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...