ஹம்பாந்தோட்டைக்கு வேண்டாமென்றால் மொணராகலைக்கு தாருங்கள் | தினகரன்


ஹம்பாந்தோட்டைக்கு வேண்டாமென்றால் மொணராகலைக்கு தாருங்கள்

 
ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில் வலயத்தில் எதிர்வரும் 3 தொடக்கம் 5 வருடங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கும் சுமார் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர்  தெரிவித்தார்.
 
இன்று (07) ஹம்பாந்தோட்டை மிரஜ்ஜவிலவில் இடம்பெற்ற கைத்தொழில் வலயத்தின் ஆரம்ப நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 
இதேவேளை குறித்த நிகழ்விற்கு ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இத்திட்டம் ஹம்பாந்தோட்டைக்கு தேவையில்லை என யாரேனும் கூறுவார்களேயாயின், அதனை மொணராகலைக்கு தருமாறு கேட்டுக்கொண்டார்.
 

Add new comment

Or log in with...