சீன ஒப்பந்தம் தொடர்பில் போதிய தெளிவில்லை | தினகரன்

சீன ஒப்பந்தம் தொடர்பில் போதிய தெளிவில்லை

 

சந்தேகங்களுக்கு இதுவே காரணம்

ஹம்பாந்தோட்டையில் காணி வழங்குவதற்காக சீனாவுடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே ஒன்றுக்குப்பின் முரணான கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புக்களுடன் இழுபறி நிலை உருவாவதற்கு காரணமென நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளுக்கிடையிலுள்ள புரிந்துணர்வில் பற்றாக்குறை இருப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், எது எவ்வாறானாலும் எந்தவொரு ஒப்பந்தமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்படும் என்பதில் ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாகவும் அச்சந்தர்ப்பத்திலாயினும் சீனர்களுக்கு காணி வழங்கும் விவகாரம் தொடர்பில் முழுமையான தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் தனது ஆட்சிக்காலத்தில் நாட்டினதும் கட்சியினதும் நன்மை கருதி கடுமையான பல சட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதி பூண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் விசேட செய்தியாளர் மாநாடொன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்தபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலீடு செய்வதற்காக ஹம்பாந்தோட்டையில் சீனர்களுக்கு காணி வழங்கப்படவுள்ளது. எனினும் அதற்கான இறுதி ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. அத்துடன் பலரும் கூறுவது போல் 15 ஆயிரம் ஏக்கர் காணியும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து வழங்கப்பட போவதுமில்லை. எதுவாக இருந்தாலும் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே கைச்சாத்தாகும் என்பதில் ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதனால் மக்கள் அனாவசியமாக குழப்பம் அடையத் தேவையில்லையென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டுக்கு முதலீடு அவசியம். இதனை நாம் வரவேற்கின்றோம். இவ்விடயத்தில் என்ன நடக்கப்போகின்றது என்ற தெளிவு போதாமல் உள்ளது. எவ்வளவு ஏக்கர் காணி வழங்கப்படும்? முதலீட்டாளர்கள் யார்? எத்தனைபேர் முதலீடு செய்ய வருவார்கள்? போன்ற எந்த தகவலும் இதுவரை பகிரங்கப்படுத்தப்ப டவில்லை. ஹம்பாந்தோட்டையில் சீனர்களுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் பற்றி விழிப்புணர்வு இல்லாமை காரணமாகவே அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதுடன் மக்கள் எதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் விளக்கமளித்தார்.

புரிந்துணர்வு உடன்படிக்ைகயில் எவர் எப்போது வேண்டுமானாலும் கைச்சாத்திடலாம். ஆனால் இறுதி ஒப்பந்தம் அவ்வாறானது அல்ல. எவ்விடயம் சார்ந்ததாக இருந்தாலும் முதலில் அமைச்சரவை, சட்டமா அதிபரின் அங்கீகாரத்துடன் இறுதியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் இங்கு இரண்டு அரசாங்கங்கள் கைச்சாத்திடப்பட வேண்டியிருப்பதனால் நிச்சயம் இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் சம்மதத்துடனேயே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாற்றங்களை துரிதமாக முன்னெடுக்க யார் ஆசைப்பட்டாலும் அதற்கும் ஒரு கால அவகாசம் தேவை. அரசியலமைப்பை நாளைக்ேககூட எம்மால் மாற்றியமைக்க முடியும். ஆனால் அங்கு ஜனநாயகம் இருக்காது.அதனால் எதற்கும் அவசரப்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி தனக்காக வாக்களித்த மக்களுக்காகவே எதிர்காலத்தில் கடுமையான சில சட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அந்தவகையில் ஜனாதிபதியின் கிழ் 09 செயற்திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கி மோசடி தொடர்பில் "கோப் "குழுவின் அறிக்ைகயை விவாதத்துக்கு எடுத்துக்ெகாள்வதற்கு இரண்டு நாட்கள் கேட்கப்பட்டபோதும் ஒரு நாள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை சதிச் செயற்பாடா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு இராஜாங்க அமைச்சர் இல்லை அதில் எவ்வித சதியும் இல்லையென மறுப்புத் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...