Friday, April 26, 2024
Home » ஓய்வூதியத்துடனான ரூ. 25,000, ரூ. 50,000 ஆக அதிகரிப்பு
ஓய்வுபெறும் கணக்காய்வாளர்களுக்கு

ஓய்வூதியத்துடனான ரூ. 25,000, ரூ. 50,000 ஆக அதிகரிப்பு

பிரதமர் யோசனை சமர்ப்பிப்பு

by damith
September 25, 2023 6:11 am 0 comment

ஓய்வூதியம் பெறும் கணக்காய்வாளர்களுக்கு ஓய்வூதிய சம்பளத்துடன் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை 50,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான யோசனையை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரலில் இந்த யோசனை உள்ளடக்கப்படுவதுடன் அடுத்து வரும் பாராளுமன்ற அமர்வின் போது, இந்த யோசனையை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி அமைச்சரவைக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதற்கு கடந்த செப்டெம்பர் 04 இல், கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் 153 (2) சரத்துக்கு இணங்க கணக்காய்வாளர்களுக்கு அரசாங்கத்தின் கூட்டு நிதியத்திற்கு வழங்கப்படும் வகையில், மேற்படி ஓய்வூதிய கொடுப்பனவுடன் குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT